மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
9 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
9 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
9 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
9 hour(s) ago
திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதிகளில் வீடுகளுக்குள் பாம்புகள் புகுவது அதிகரித்துள்ளது.திருவாடானை, தொண்டி பகுதி வீடுகளில் பாம்புகள் புகுவதும் தீயணைப்புதுறையினர் சென்று பிடித்து காட்டுப்பகுதிக்குள் விடும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இது குறித்து தீயணைப்புதுறையினர் கூறியதாவது:பாம்புகள் இதமான வெப்ப சூழ்நிலையில் வாழும் உயிரினம். வெப்பம் அதிகமாக இருப்பதால் திறந்த வெளி புற்றுக்கள், மறைவிடங்களில் வசிக்கும் பாம்புகள் வெப்பம் தாங்காமல் வெளியேறும். இவை வீடுகளில் குளிர்ச்சியான இடங்களை தேடி வந்து பதுங்க வாய்ப்பு உள்ளது.இவற்றை பார்த்து தொந்தரவு செய்யும் போது விஷமுள்ள பாம்புகள் கடித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.இதனால் பாம்புகளை பார்த்தால் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு 04561--254 399 என்ற தொலைபேசியில் தெரிவிக்கலாம். கடந்த இரு மாதங்களில் இப் பகுதியில் 40க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டுள்ளது என்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago