உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆன்லைன் சூதாட்டம் நடத்திய6 இளைஞர்களிடம் விசாரணை

ஆன்லைன் சூதாட்டம் நடத்திய6 இளைஞர்களிடம் விசாரணை

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் சட்ட விரோதமாக ஆன்லைன் சூதாட்டம் நடத்தியதாக, 6 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ராமநாதபுரம் அருகே பட்டணங்காத்தானில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆன்லைன் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த வீட்டில் சோதனையிட்ட போது அங்கிருந்த சத்திரக்குடி கார்த்திக் ராஜா, பழனிக்குமார், பட்டணம்காத்தான் மாரி சரவணன், தீயனுார் இளங்கோவன், பேராவூர் கரண், ராமநாதபுரம் சந்தோஷ்குமார் ஆகியோரை பிடித்து கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.அவர்களிடமிருந்த லேப்டாப், ஏ.டி.எம்., கார்டு, பென் டிரைவ், அலைபேசி ஆகியவற்றை பறிமுதல் செய்து அவற்றை ஆய்வு செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை