உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குளோரின் கேஸ் சிலிண்டர் கசிவு மூச்சுத்திணறலால் மக்கள் பாதிப்பு

குளோரின் கேஸ் சிலிண்டர் கசிவு மூச்சுத்திணறலால் மக்கள் பாதிப்பு

சாயல்குடி: சாயல்குடியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அறையில் இருந்த பழைய குளோரின் வாயு நிரப்பிய சிலிண்டர் கசிவால், அப்பகுதி மக்கள் மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டனர்.சாயல்குடியில் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இங்குள்ள சிறிய அறையில் நேற்று மாலை 4:00 மணிக்கு துருப்பிடித்த பயன்பாடு இல்லாத குளோரின் கேஸ் சிலிண்டரில் இருந்து கசிந்த வாயு வெளியேறியதால் அப்பகுதியில் வசித்த பொதுமக்களுக்கு மூச்சுத் திணறலும், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டது. சாயல்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து தலைமையில் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிலிண்டர் மூலம் கசிந்த வாயு படிந்த இடங்களில் முக கவசம் அணிந்து தண்ணீர் ஊற்றி வாயுவை வெளியேற்றினர். அப்பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்டவைகளிருந்து பொதுமக்கள் வெளியேறினர். சிலிண்டர் காலியானவுடன் அவற்றை பாதுகாப்பாக வெளியே எடுத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை