உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேசிய டாக்டர்கள் தினம்

தேசிய டாக்டர்கள் தினம்

பரமக்குடி : பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தேசிய டாக்டர்கள் தினம் கொண்டாடப்பட்டது.பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சேது கருணாநிதி முன்னிலை வகித்தார். தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் முத்தரசன் வரவேற்றார். அப்போது டாக்டர்களின் மகத்தான சேவை மற்றும் 24 மணி நேரம் மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மேலும் அனைத்து பணி டாக்டர்களுக்கும், பொன்னாடை மற்றும் கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இதில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர். டாக்டர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி