உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வீட்டில் நகை திருடிய முதியவர் கைது

வீட்டில் நகை திருடிய முதியவர் கைது

பரமக்குடி : பரமக்குடியில் வீட்டை சாவியால் திறந்து 15.5 பவுன் நகையை திருடிய முதியவர் கைது செய்யப்பட்டார்.ராமநாதபுரம் பெரியபட்டிணம் தொருவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனி நூர்தீன் 66. இவர் பரமக்குடி சவுக்கதலி தெருவில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அவர் இல்லாத நிலையில் அருகில் இருந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் அவரது வீட்டை பூட்டி சாவியை ஜன்னலில் வைத்து சென்றதை பார்த்துள்ளார். பின் சீனிநூர்தீன் கோபாலகிருஷ்ணன் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றபோது பீரோவின் சாவி அருகில் இருந்துள்ளது.பீரோவை திறந்து அதில் இருந்து தங்கச் செயின் தோடு, நெக்லஸ் உட்பட 15.5 பவுன் நகையை திருடி சென்றுள்ளார்.இத்திருட்டு தொடர்பாக பரமக்குடி டவுன் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் சீனிநூர்தீனை கைது செய்தனர். விசாரணையில் பல இடங்களில் அவர் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை