உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் முத்தாலம்மன் கோயில் பங்குனி பால்குட விழா கோலாகலம் பக்தர்கள் நேர்த்திக்கடன்

பரமக்குடியில் முத்தாலம்மன் கோயில் பங்குனி பால்குட விழா கோலாகலம் பக்தர்கள் நேர்த்திக்கடன்

பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி பால்குட விழாவில் பல ஆயிரம் பக்தர்கள் பால்குடம் சுமந்து சக்தி கோஷம் முழங்க நேர்த்தி கடன்களை செலுத்தினர்.கோயிலில் மார்ச் 1ல் பூச்சொரிதல் விழா நடந்த நிலையில் மார்ச் 17ல் கொடியேற்றத்துடன் பங்குனி விழா துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். மார்ச் 25ல் அக்னி சட்டி ஊர்வலம், இரவு மின் தீப அலங்கார தேரில் அம்மன் வலம் வந்தார். மறுநாள் அதிகாலை கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் அம்மன் எழுந்தருளினார்.நேற்று அதிகாலை 4:00 மணி முதல் வைகை ஆற்றுப் பகுதிகளில் பல்வேறு அமைப்பினர் சார்பில் பால் குடங்களை கட்டும் நிகழ்வு நடந்தது. அங்கிருந்து நகரின் முக்கிய வீதிகளில் பால்குடத்துடன் வலம் வந்த பல ஆயிரம் பக்தர்கள் சக்தி கோஷம் முழங்க கோலாகலமாக சென்றனர்.ஏராளமானோர் வேல் குத்தி நேர்த்தி கடன்களை செலுத்தினர். தொடர்ந்து 5 மணி நேரம் வரை பக்தர்கள் கோயிலை நோக்கி சென்ற வண்ணம் இருந்தனர். காலை 10:00 மணி முதல் அனைத்து வகை அபிஷேகங்கள் நடந்தன.பக்தர்கள் சுமந்து வந்த பால் மூலவர் மற்றும் உற்ஸவருக்கு குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. மகா தீபாராதனைக்கு பின் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.இரவு அம்மன் சயன திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் பவனி வந்தார். ஏற்பாடுகளை முத்தாலம்மன் தேவஸ்தான டிரஷ்டிகள் மற்றும் ஆயிர வைசிய சபையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை