உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி லயன்ஸ் கிளப் இலவச மருத்துவ முகாம்

பரமக்குடி லயன்ஸ் கிளப் இலவச மருத்துவ முகாம்

பரமக்குடி: -பரமக்குடி லயன்ஸ் கிளப், லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுரை பாண்டியன் ஹார்ட் ஸ்பெஷாலிட்டி கிளினிக், மதுரை அபிமன் கிட்னி சென்டர் மற்றும் மதுரை பழனி ஆண்டவர் காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை சார்பில் பரமக்குடியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.பரமக்குடி லயன்ஸ் கிளப் தலைவர் இளங்குமரன் தலைமை வகித்தார். பள்ளி தலைவர் சவுந்தர நாகேஸ்வரன், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் தினகரன், சங்க பொருளாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுப்பையா வரவேற்றார்.லயன்ஸ் மாவட்ட கவர்னர் அய்யாத்துரை வாழ்த்தினார். இதில் பொது மருத்துவம், இருதய, சர்க்கரை நோய் மருத்துவம், இ.சி.ஜி., எக்கோ டெஸ்ட், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.டாக்டர்கள் பிரசன்னா, ரமேஷ் பாபு, கண்ணப்பன் அழகப்பன் பரிசோதனை மேற்கொண்டனர். இலவச மருந்துகள் வழங்கப்பட்டது. லயன்ஸ் நிர்வாகிகள் டாக்டர் சோலைமலை வரதராஜன், குருசண்முக சுந்தரம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கமலக்கண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி