உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெருநாழியில் பஸ் வசதியின்றி பயணிகள் அவதி

பெருநாழியில் பஸ் வசதியின்றி பயணிகள் அவதி

பெருநாழி : பெருநாழியில் இரவு 7:00 மணிக்கு மேல் போதிய வசதியின்றி கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் தினமும் சிரமப்படுகின்றனர்.பெருநாழி சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லக்கூடிய பிரதான நகராக விளங்குகிறது. சாயல்குடி, கமுதி, மதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் பெருநாழி வழியாக செல்கின்றன.அருப்புக்கோட்டை டிப்போ பஸ்கள் மற்றும் ராமநாதபுரம் டிப்போ பஸ்கள் இவ்வழியாக செல்கின்றன. பெருநாழி பஸ் ஸ்டாண்டில் இரவு 7:00 மணிக்கு மேல் அருப்புக்கோட்டை டிப்போ பஸ் வராமல் ஒரு கி.மீ., தொலைவிற்கு பிறகு நேதாஜி பஜாரில் பயணிகளை இறக்கி செல்கின்றனர். பயணிகள் கூறியதாவது:இரவில் பஸ் வராததால் 1 முதல் 2 கி.மீ.,க்கு நடந்தும், வாடகை வாகனங்களில் செல்லவும் வேண்டியுள்ளது.இரவு நேரங்களில் கூட்டமாகத் திரியும் நாய்கள் பயணிகளை விரட்டி கடிக்கின்றன. இரவில் பஸ் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் முன் வரவேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை