உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நோயாளிகள் அலைக்கழிப்பு

நோயாளிகள் அலைக்கழிப்பு

மருத்துவமனையில் போதுமான கட்டடம், தொழில் நுட்ப வசதிகள், போதுமான படுக்கைகள், நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் என பல்வேறு வசதிகள் இருந்தும் டாக்டர்கள் போதுமான அளவில் இல்லாததால் நோயாளிகள் அலைக்கழிப்பு செய்யப்படுகின்றனர்.தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், 500க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு சிகிச்சைப்பிரிவுகளில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் நோயாளிகளை பரிசோதனை செய்து அவர்களது நோய் தன்மை தெரிவதற்காக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்கின்றனர்.ரேடியாலஜி பிரிவில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளை 'இன்று போய் நாளை வா' என அலைக்கழிப்பு செய்யப்படுகின்றனர். குறிப்பாக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுப்பதற்கு தினமும் வெளி நோயாளிகள் 50 பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.டாக்டர்களோ பல்வேறு துறைகளில் இருந்து பரிந்துரை செய்யப்படும் போது நாள் ஒன்றுக்கு நுாறுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்கின்றனர். ஸ்கேன் பிரிவில் 2 டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.அவர்களால் நாள் ஒன்றுக்கு வெளி நோயாளிகள் 50 பேருக்கு மட்டுமே ஸ்கேன் எடுக்க முடிகிறது. மீதமுள்ளவர்களை இரண்டு முதல் நான்கு நாட்கள் கழித்து வருமாறு பணியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். அது வரை நோயாளி எப்படி காத்திருப்பர்.ரேடியாலஜி பிரில் 8 டாக்டர்கள் இருக்க வேண்டும். தற்போது 2 டாக்டர்கள் மட்டுமே பணியில் இருப்பதால் நோயாளிகள் அலைக்கழிப்பு செய்யப்படுகின்றனர். இது தவிர உள்நோயாளிகளுக்கு எந்த நேரத்திலும் அவசர, அவசியம் கருதி 24 மணி நேரமும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கப்பட்டு வருகிறது.அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ரேடியாலஜி பிரிவில் அதிக டாக்டர்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி