உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோட்டோரம் குப்பை கொட்டி  தீவைப்பதால் மக்கள் அவதி

ரோட்டோரம் குப்பை கொட்டி  தீவைப்பதால் மக்கள் அவதி

பட்டணம்காத்தான் : ராமநாதபுரம் அருகே சக்கரகோட்டை, சூரன்கோட்டை பட்டணம்காத்தான் ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஊருணிகள், ரோட்டோரத்தில் காலி இடங்களில் குப்பையை கொட்டுவது வாடிக்கையாகியுள்ளது. அதுமட்டுமின்றி சில இடங்களில் குப்பையில் தீ வைத்து எரிப்பதால் அருகேயுள்ள குடியிருப்பு பகுதிகளில் புகை பரவி மக்கள் சிரமப்படுகின்றனர்.குறிப்பாக பட்டணம்காத்தான் ஊராட்சி கலெக்டர் அலுவலக வளாகம், டி-பிளாக் அரசு மருத்துவகல்லுாரி ரோட்டில் குப்பையை கொட்டி தீ வைத்து எரிப்பதால் அப்பகுதி முழுவதும் புகை பரவி அவ்வழியாக வாகனங்களில் செல்லும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.எனவே ஊராட்சிகளில் ரோட்டோரத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். குறிப்பாக தீ வைத்து எரிப்பவர்களை கண்டறிந்து அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை