உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விவேகானந்தபுரம், திருவெற்றியூர் கோயில்களில் பூக்குழி உற்ஸவம்

விவேகானந்தபுரம், திருவெற்றியூர் கோயில்களில் பூக்குழி உற்ஸவம்

கீழக்கரை : கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி விவேகானந்தபுரத்தில் 16ம் ஆண்டு பூக்குழி உற்ஸவ விழா நடந்தது.ஆக.6ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவர்கள் சித்தி விநாயகர், காந்தாரியம்மன், ராக்காச்சி அம்மன், கருப்பண்ணசாமி, இருளப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் தொடர்ந்து பத்து நாட்களும் நடந்து வருகிறது.நேற்று இரவு 8:00 மணிக்கு விவேகானந்தபுரம் கடற்கரை சென்று அம்மன் சக்தி கரகம் எடுத்து வந்து கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து இரவு 11:00 மணிக்கு கோயிலை வந்தடைந்தது. பின்னர் கோயில் முன் வளர்க்கப்பட்ட அக்னியில் நேர்த்திக்கடன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.இன்று காலை பாரதிநகர் விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம், காவடி எடுத்து கோயிலை வந்தடைகின்றனர். பத்து நாட்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஆக.16 காலை 9:00 மணிக்கு கருப்பண்ணசாமிக்கு பூஜைகளுடன் விழா நிறைவடைகிறது. இரவில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை விவேகானந்தபுரம் கிராம மக்கள் செய்துள்ளனர்.

திருவாடானை

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் பூச்சொரிதல் விழாவில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வெள்ளி ரிஷப வாகனத்தில் பாகம்பிரியாள், வல்மீகநாதர் வீதி உலா நடைபெற்றது. முன்னதாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கலைநிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை கிராமத்தார்கள், வர்த்தக சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை