உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செவ்வூர்-முதலுார் ரோட்டில் பள்ளம்

செவ்வூர்-முதலுார் ரோட்டில் பள்ளம்

பரமக்குடி: பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் செவ்வூர் -முதலுார் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.பரமக்குடி அருகே போகலுார் ஒன்றிய பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதன்படி செவ்வூர் வழியாக முதலுார் செல்லும் ரோடு உள்ளது. இந்த ரோட்டில் குறிப்பிட்ட இடங்களில் தார் ரோடு அமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது.மேலும் ரோட்டில் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் செவ்வூர்- முதலூர் ரோட்டின் குறுக்கே கால்வாய் பாலம் செல்கிறது. இங்கு மூன்று முனை சந்திக்கும் இடத்தில் பெரிய பள்ளம் உள்ளது.தொடர்ந்து தினந்தோறும் இதன் வழியாக ஏராளமான டூவீலர்கள், பஸ், டிராக்டர்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் பள்ளங்களை அறியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கிராம நெடுஞ்சாலை அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை