உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டாக்டர்கள் நியமிக்க கோரி போராட்டம்

டாக்டர்கள் நியமிக்க கோரி போராட்டம்

திருவாடானை, : திருவாடானை அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.திருவாடானையில் அரசு மருத்துவமனையில் இரண்டு டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களும் மதியம் 12:00 மணியோடு சென்று விடுவதால் நோயாளிகள் சிரமம் அடைகின்றனர். எனவே கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும். ஸ்கேன், எக்ஸ்ரே, மற்றும் ரத்தப் பரிசோதனை செய்ய பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி மார்க்கிஸ்ட் கம்யூ., சார்பில் திருவாடானை தெற்கு தெருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தாலுகா செயலாளர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமு, மூத்த உறுப்பினர் நாகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை