உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கடல் நீர்மட்டம் உயர்வு சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் பதிவு

ராமேஸ்வரம் கடல் நீர்மட்டம் உயர்வு சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் பதிவு

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடல் நீர்மட்டம் உயர்ந்து மண் அரிப்பு ஏற்படுகிறதா என சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் நவீன கருவியில் பதிவு செய்தனர்.பாக்ஜலசந்தி கடலில் நீர்மட்டம் உயர்ந்து ராமேஸ்வரம், பாம்பன் கடலோரத்தில் மண் அரிப்பு ஏற்படுகிறதா எனவும், ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் உள்ள முக்கிய பகுதிகளை கூகுள் மேப்பில் பதிவு செய்ய தமிழ்நாடு கடல் சார் அமைப்பு சென்னை ஐ.ஐ.டி.,யை வலியுறுத்தியது.இதையடுத்து சென்னை ஐ.ஐ.டி., பொறியாளர்கள் குழுவினர் நேற்று ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் டிஜிட்டல் குளோபல் பொசஸ்சிவ் சிஸ்டம் கருவி மூலம் பதிவு செய்து குறிப்புகள் எடுத்தனர்.இக்குழு ராமேஸ்வரம் ஓலைகுடா, தனுஷ்கோடி, பாம்பன் கடல் பகுதியை பதிவு செய்தனர். சில நாட்களில விரிவான பதிவுகளை தமிழ்நாடு கடல் சார் அமைப்புக்கு வழங்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை