| ADDED : ஜூன் 22, 2024 05:01 AM
திருவாடானை: திருவாடானை தாலுகா ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு காரணமாக கடந்த மாதம் பெரும்பாலான கார்டுதாரர்களுக்கு துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படவில்லை.மே மாதத்திற்கான ஒதுக்கீட்டு துவரம் பருப்பு, பாமாயிலை ஜூன் மாத ஒதுக்கீட்டுடன் சேர்த்து கார்டுதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்தது. திருவாடானை தாலுகாவில் மே மாதத்தில் சில கடைகளுக்கு மட்டும் பாமாயில், துவரம் பருப்பு வழங்கப்பட்டது.கடந்த மாதம் துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்காத கார்டுதாரர்கள் இம்மாதம் இரட்டிப்பாக கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. சிவில் சப்ளை அலுவலர்கள் கூறுகையில், இந்த மாத ஒதுக்கீடு விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட குடோன்களுக்கு வந்து சேர்ந்தவுடன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு, கார்டுதாரர்களுக்கு துவரம் பருப்பு, பாமாயில் வினியோகிக்கப்படும் என்றனர்.