உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலரை இணைக்க கோரிக்கை

ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலரை இணைக்க கோரிக்கை

திருப்புல்லாணி: அரசு ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் சேகு ஜலாலுதீன் கூறியதாவது:ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க பலமுறை வலியுறுத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து இன்று(ஆக.21) தற்செயல் விடுப்பு எடுத்து மாநிலம் முழுவதும் அந்தந்த கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.அதன் பிறகும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் செப்.27ல் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு மாநில அளவிலான முறையீட்டு இயக்கம் நடக்கிறது என்றார்.மாவட்டத் தலைவர் திருமுருகன், ஒன்றிய செயலாளர் பழனி முருகன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ