உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோடு சேறும் சகதியுமாக மாறியதால் மக்கள் சிரமம்

ரோடு சேறும் சகதியுமாக மாறியதால் மக்கள் சிரமம்

முதுகுளத்துார், : -முதுகுளத்துார்--சிக்கல் ரோடு காத்தாகுளம் அருகே ரோடு சேதமடைந்து சேறும் சகதியானதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.முதுகுளத்துாரில் இருந்து காத்தாகுளம், மு.சாலை, மேலச்சிறுபோது வழியாக சிக்கல் செல்லும் ரோடு உள்ளது. கிராமங்களுக்கு ரோட்டோரத்தில் புதிதாக குழாய் அமைக்கும் பணிக்காக ரோடு தோண்டப்பட்டு சமன் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதுகுளத்துாரில் இருந்து காத்தாகுளம் கிராமத்திற்கு செல்லும் ரோட்டோரத்தில்​மழை நேரங்களில் சேறும் சகதியுமாக மாறி வருகிறது. எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்லும் போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் ரோடும் ஆங்காங்கே சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இரவு நேரத்தில் மக்கள் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். எனவே ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை