மேலும் செய்திகள்
இ--பைலிங் முறை: வக்கீல்கள் உண்ணாவிரதம்
8 hour(s) ago
மாணவர்கள் அறிவியல் சுற்றுலா
8 hour(s) ago
கிடப்பில் ராமேஸ்வரம் கோயில் யானை மணிமண்டபம் கட்டடம்
8 hour(s) ago
ஆதார் மைய கட்டடம் கட்ட ஆதரவும், எதிர்ப்பும்
8 hour(s) ago
தேவிபட்டினம் : தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் நடை பாதை மீது கூரை அமைக்கும் பணி நடக்கிறது.தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் கடலுக்குள் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடலுக்குள் உள்ள நவக்கிரகங்களை வழிபட செல்லும் பக்தர்கள் நடைமேடை வழியாக சுற்றி வந்து வழிபடுகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த நவக்கிரகங்களுக்கு செல்வதற்கு அமைக்கப்பட்ட நடைபாதையின் மேல் துாண்கள் அமைக்கப்பட்டு மங்களூரு ஓடுகளில் கூரை அமைக்கும் பணிக்கு ரூ.57 லட்சத்தில் பணிகள் துவங்கி உள்ளன.இதனால் பக்தர்கள் வெயிலின் வெப்பம் தாக்காமல் சென்று வரும் நிலை ஏற்படும். பணிகளை ஹிந்து சமய அறநிலையத்துறை சிவகங்கை இணை ஆணையர் பழனிக்குமார், செயல் அலுவலர் நாராயணி, எழுத்தர் தங்கவேல் பாண்டியன் ஆய்வு செய்தனர்.கட்டுமானப் பணிகள் முறையாகவும், தரமாகவும் நடப்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago