உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எலுமிச்சை வரத்து குறைவால்கிலோ ரூ.100க்கு விற்பனை

எலுமிச்சை வரத்து குறைவால்கிலோ ரூ.100க்கு விற்பனை

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வெளியூர்களில் இருந்து வரும் எலுமிச்சைபழங்கள் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்து கிலோரூ.100க்கு விற்கப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறி, பழங்கள் குறைந்தஅளவே சாகுபடி செய்யப்படுகிறது. இதனால்வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்றன.தற்போது ஆடி மாதம் கோயில் விழாக்கள் காரணமாக எலுமிச்சைபழங்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் வெளியூர் வரத்தும் குறைந்துள்ளது.இதனால் கடந்த மாதங்களில் கிலோரூ.80க்கு விற்ற எலுமிச்சை பழங்கள் தற்போது கிலோ ரூ.100க்குவிற்கப்படுகிறது. ஆடி வெள்ளி, ஆடிப்பெருக்கு, அமாவாசை வர உள்ளதால் விலை குறைய வாய்ப்பு இல்லை எனவியாபாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி