உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலில் பயணிகளை ஏற்றிச்சென்ற படகு பறிமுதல்

கடலில் பயணிகளை ஏற்றிச்சென்ற படகு பறிமுதல்

தொண்டி, : தொண்டி கடலில் தடையை மீறி பாதுகாப்பு இல்லாமல் பயணிகளை ஏற்றிச் செல்வது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதால் மீனவரின் படகை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர்.தொண்டி கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மீனவர்கள் கடலுக்குள் அனுமதி இல்லாமல் படகில் அழைத்து செல்கின்றனர். மீன்பிடி படகுகளில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது என தடை இருந்தும் சில மீனவர்கள் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக பெற்றுக் கொண்டு ஏற்றிச் செல்கின்றனர்.பத்து பேர் செல்லக்கூடிய படகுகளில் 20க்கும் மேற்பட்டோர் செல்கின்றனர். கடலுக்குள் செல்லும் போது ஆர்வத்தில் பயணிகள் எழ முயற்சிக்கும் போது படகு ஆட்டம் காண்பதுடன் தடுமாறி கவிழ வாய்ப்பு உள்ளது. இதுவே பெரும்பாலன விபத்திற்கு காரணமாக அமைந்து விடுகிறது. ஆகவே அனுமதி இல்லாமல் படகில் அழைத்துச் செல்லும் மீனவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர், மீன் அமலாக்கபிரிவு மரைன் எஸ்.ஐ., குருநாதன் தொண்டி மகாசக்திபுரம் மீனவர்களை சந்தித்து தடையை மீறி படகில் பயணிகளை அழைத்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். அதனை தொடர்ந்து மீனவர் காளிஸ்வரன் படகு பறிமுதல் செய்யபட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை