உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாரம்பரிய வேளாண்மை குறித்து கருத்தரங்கம்

பாரம்பரிய வேளாண்மை குறித்து கருத்தரங்கம்

முதுகுளத்துார் : முதுகுளத்துாரில் வேளாண் துறை சார்பில் பாரம்பரிய வேளாண்மை குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம், கண்காட்சி நடந்தது.வேளாண் இணை இயக்குனர் கண்ணையா தலைமை வகித்தார். துணை இயக்குனர் பாஸ்கர மணியன், ராமநாதபுரம் விற்பனை குழு செயலாளர் ராஜா முன்னிலை வகித்தனர். உதவி இயக்குனர் கேசவராமன் வரவேற்றார். இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல் ரகங்கள், அரிசி, பயறு வகைகள், விதைகள் விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினர். இயற்கை விவசாயத்தில் சிறப்பாக செயல்பட்ட அப்பனேந்தல், திருவரங்கம், வளநாடு உள்ளிட்ட பகுதி விவசாய குழுக்களுக்கு உயிர்மச்சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை