உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சார் பதிவாளர் அலுவலகம் முன் கழிவுநீரால் சுகாதாரக்கேடு

சார் பதிவாளர் அலுவலகம் முன் கழிவுநீரால் சுகாதாரக்கேடு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் சார்பதிவாளர் அலுவலகம் அருகே தேங்கிய கழிவுநீரால் துர்நாற்றத்தினால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நிலம் தொடர்பான பத்திரப்பதிவு மற்றும் திருமண பதிவு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பதிவுகளுக்கு தினமும் ஏராளமான பயனாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சார் பதிவாளர் அலுவலகம் நுழைவு வாயில் பகுதியில், பல நாட்களாக தேங்கியுள்ள கழிவு நீரால், அப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நோற்தொற்றுபரவ வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி துறை அதிகாரிகள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு முன்பு தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றி நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி