உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 700 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; இருவர் கைது

700 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; இருவர் கைது

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., மோகன், எஸ்.எஸ்.ஐ., குமாரசாமி உள்ளிட்ட போலீசார் ஆர்.எஸ்.மங்கலம் - காரைக்குடி ரோட்டில், இந்திரா நகர் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அங்கு வந்த ஒரு காரில், 50 கிலோ கொண்ட 14 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது.கார் உரிமையாளரான சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கொத்தடி, காமராஜர் நகரைச் சேர்ந்த சங்கர், 50, டிரைவர் பெருவழுதி, 30, ஆகியோரை கைது செய்து, 700 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்தனர். விசாரணையில், உப்பூர், பரனுார் பகுதியில் மக்களிடம் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி, தேவக்கோட்டை, காரைக்குடி பகுதியில் உள்ள ேஹாட்டல்களில் விற்பனைக்காக கடத்தியதாக கைதானவர்கள் தெரிவித்தனர்.---------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை