மேலும் செய்திகள்
35 மீனவர்களுக்கு நவ.17 வரை காவல்
15 minutes ago
விழிப்புணர்வு
4 hour(s) ago
மூன்று தனிப்படை அமைப்பு
4 hour(s) ago
கண்மாய் நீர் பாய்ச்சுதல்
4 hour(s) ago
மாவட்ட அளவில் கபடி போட்டி: 24 பள்ளிகள் பங்கேற்றன
4 hour(s) ago
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பட்டணம் காத்தானில் வீட்டில் வெள்ளி பொருட்களை திருடியவர்களை அப்பகுதியில் பொருத்தப்பட்ட அதிநவீன கேமராக்கள் உதவியுடன் 24 மணி நேரத்தில் 4 பேரை கைது செய்த போலீசாரை எஸ்.பி., சந்தீஷ் பாராட்டினார்.பட்டணம்காத்தான் ஊராட்சி பிருந்தாவன் கார்டன் 1வதுதெரு சகாதேவன் வீட்டில் ஜூலை 18ல் பட்டப்பகலில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 120 கிராம் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவுசெய்தனர்.எஸ்.பி., சந்தீஷ் உத்தரவில் போலீசார் தீவிரமாக தேடினர். அப்போது இ.சி.ஆர்., சந்திப்பில் வைத்துள்ள வாகனங்களின் பதிவு எண்ணை துல்லியமாக பதிவு செய்யும் அதிநவீன ஏ.என்.பி.ஆர்., கண்காணிப்பு கேமராவில் பதிவான வாகன பதிவு எண்ணை வைத்து விசாரணை செய்தனர்.இதில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை காசிம் 43, மங்கலம் கிராமத்தை சேர்ந்த சாத்தையா 36, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை புத்தன்தரவையை சேர்ந்த பால்சாமி 43, துாத்துக்குடி மாவட்டம் குரும்பூர் ரவி 46, ஆகியோரை கைது செய்தனர். 120 கிராம் வெள்ளிப் பொருட்கள் மீட்கப்பட்டது.திருட்டு நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை எஸ்.பி., சந்தீஷ் பாராட்டி ரொக்கப்பரிசு வழங்கினார். ராமநாதபுரம் உட்கோட்டத்தில் 16 இடங்களில் அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில் அனைத்து இடங்களில் பொருத்தப்படும் என எஸ்.பி., சந்தீஷ் தெரிவித்துள்ளார்.
15 minutes ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago