| ADDED : ஜூன் 02, 2024 03:33 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு 'வெற்றியை நோக்கி' என்ற நான்கு நாள் கோடை கால பயிற்சி முகாம் நடந்தது.த.மு.மு.க மாநில தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன், மாநில நிர்வாகி புதுமடம் அனிஸ், கல்வியின் அவசியம், போதை விழிப்புணர்வு குறித்து நான்கு நாள் பயிற்சி வகுப்புகள் நடத்தினர்.சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாஹ்கான், தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெயினுலாபுதீன், மத்திய மாவட்டத்தலைவர் இப்ராஹிம், மேற்கு மாவட்டத்தலைவர் ேஷக் அப்துல்லா, தெற்கு மாவட்டத் தலைவர் பாபாராவுத்தர், மாவட்ட செயலாளர் அப்துல்ரஹீம், நகர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.பயிற்சி நிறைவு பெற்ற மாணவர்களுக்கு த.மு.மு.க., மாநில தலைவர் ஜவாஹிருல்லா சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினார். ஏற்பாடுகளை சமூகநீதி மாணவர் இயக்க மண்டல செயலாளர் அப்துல் வாஜித், மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாஹ்கான், நகர் செயலாளர் அயூப்கான் செய்திருந்தனர்.