உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாகனம் மோதி வாலிபர் பலி

வாகனம் மோதி வாலிபர் பலி

பரமக்குடி: பரமக்குடி அருகே ராமநாதபுரம் இரு வழிச் சாலை பொட்டிதட்டி பகுதியில் சரக்கு வாகனம் மோதி டூவீலரில் சென்றவர் பலியானார்.சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே காரைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் 21. இவர் நேற்று மாலை மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் நோக்கி டூவீலரில் சென்றார்.அப்போது பொட்டிதட்டி பஸ் ஸ்டாப் அருகில் சென்றபோது எதிரில் தேங்காய் ஓடு ஏற்றி வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் வினோத்குமார் சம்பவ இடத்தில் பலியானார். பரமக்குடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை