உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் வடக்கூர் மங்கள விநாயகர், திரிபுரசுந்தரி பத்ரகாளியம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. யாக பூஜைகள்,பூர்ணாஹுதி தீபாராதனைகள் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு மூன்றாம், நான்காம் கால யாக பூஜைகள், தீபாராதனை, கடம் புறப்பாட்டிற்கு பின் கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. மூலவரான திரிபுரசுந்தரி பத்திரகாளியம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 21 வகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முதுகுளத்துார் க்ஷத்திரிய ஹிந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை