உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தங்கச்சிமடம்: டிரான்ஸ்பார்மருக்கு மக்கள் ஒப்பாரி போராட்டம்

தங்கச்சிமடம்: டிரான்ஸ்பார்மருக்கு மக்கள் ஒப்பாரி போராட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று தொடர் மின்தடையை கண்டித்து கிராமத்தில் மின் வாரிய டிரான்ஸ்பார்மருக்கு மக்கள் ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.தங்கச்சிமடம் ஊராட்சி தண்ணீர் ஊற்று கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் பயன்பாடின்றி போனதால் மின் அழுத்தம் ஏற்றம் இறக்கமாக வருவதால் வீடுகளில் உள்ள டி.வி., மின் மோட்டார், பேன்கள் அடிக்கடி பழுதாகி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.இந்த மின் டிரான்ஸ்பார்மரை அகற்றி புதிய டிரான்ஸ்பார்மரை பொருத்த மக்கள் பலமுறை வலியுறுத்தியும் மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனை கண்டித்து நேற்று காலை 9:00 மணிக்கு கிராம மக்கள் பயன்பாடில்லாத டிரான்ஸ்பார்மர் முன்பு திரண்டனர். இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்வது போல் டிரான்ஸ்பார்மருக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரியிட்டு சாலை மறியல் செய்தனர். மின்வாரிய அதிகாரிகள், தங்கச்சிமடம் போலீசார் சமரசம் செய்து விரைவில் 100 கிலோ வாட் புதிய டிரான்ஸ்பார்மரை பொருத்த மின்வாரியஅதிகாரிகள் முன் வந்தனர். எதிர்ப்பு தெரிவித்த மக்கள் தொடர்ந்து மறியல் செய்தனர்.அதன்பின் 250 கிலோ வாட் புதிய டிரான்ஸ்பார்மரை பொருத்தினர். இதையடுத்து 3 மணி நேரம் நடந்த போராட்டத்தை மக்கள் வாபஸ் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை