உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதி அருகே ஆக்கிரமிப்புகளை​ அகற்றி பள்ளி கட்டடம் கட்டும் பணி துவக்கம்

கமுதி அருகே ஆக்கிரமிப்புகளை​ அகற்றி பள்ளி கட்டடம் கட்டும் பணி துவக்கம்

கமுதி: -கமுதி அருகே முஷ்டக்குறிச்சி கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலத்தை போலீஸ் உதவியுடன் அதிகாரிகள் மீட்டனர்.கமுதி அருகே முஷ்டக்குறிச்சி கிராமத்தில் சிலர் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து மரங்கள் வளர்த்துள்ளனர். அரசு பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அப்போது பள்ளி அருகே உள்ள இடத்தை கமுதி தாசில்தார் சேதுராமன் தலைமையில் பி.டி.ஓ.,க்கள் கோட்டைராஜ், மணிமேகலை, பொறியாளர் மணிமேகலை முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்தனர். அப்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து முழுமையாக அளவீடு செய்து போலீஸ் உதவியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு அரசு பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டும் பணி துவக்கப்பட்டது. முஷ்டக்குறிச்சி ஊராட்சித் தலைவர் பரமேஸ்வரி கூறியதாவது:முஷ்டக்குறிச்சி ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலங்களை வருவாய்த்துறையினர் முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும். அப்போது ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு பொதுமக்களுக்கு தேவையான ரேஷன் கடை, நுாலகம் உள்ளிட்ட அரசு கட்டடங்கள் கட்டுவதற்கு உதவியாக இருக்கும்.எனவே அதிகாரிகள் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்