மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
9 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
9 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
9 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
9 hour(s) ago
ராமநாதபுரம்,: '-இலங்கை சிறையில் வாடும் ராமநாதபுரம் மீனவர்களை மீட்க, தமிழக அரசு மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தரவில்லை' என, தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனிலிருந்து சென்ற 3 நாட்டுப்படகுகள், திருவாடானை தாலுகா நம்புதாளையிலிருந்து சென்ற ஒரு நாட்டுப்படகு என, நான்கு நாட்டுப்படகுகளில் இருந்த, 25 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர், ஜூலை 1ல் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னதம்பி அறிக்கை:விசைப்படகுகளில் பயன்படுத்தும் வலைகளால், மீன் வளங்கள் பாதிப்பதாக தெரிவித்தனர். நாட்டுப்படகு மீனவர்கள் பயன்படுத்தும் வலையால், எந்த தீங்கும் இல்லை என தெரிந்து, கடந்த காலங்களில் இலங்கை கடற்படையினர் நாட்டுப்படகு மீனவர்களை கைது செய்தாலும் உடனடியாக விடுவித்துள்ளனர்.தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை, விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு உரிய அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்கவில்லை. மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் இலங்கை சிறையில் வாடுகின்றனர்.தொடர் போராட்டங்களை மீனவர்கள் தரப்பில் நடத்தினாலும், உரிய நடவடிக்கை இல்லை. இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்களின் காவலை நீட்டித்துள்ளது வருத்தமளிக்கிறது. ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினரை பார்க்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago