உள்ளூர் செய்திகள்

வாலிபர் பலி

தொண்டி : தொண்டி அருகே நவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் 23. கிழக்கு கடற்கரை சாலையில் டூவீலரில் தொண்டியை நோக்கி சென்றார். தேனி மாவட்டம் சித்தன்சேரியை சேர்ந்தவர் பீட்டர் 50. இவரும் தொண்டியை நோக்கி டூவீலரில் சென்றார்.நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு வட்டாணம் விலக்கு ரோட்டில் இருவரும் மோதிக்கொண்டனர். இதில் அஜித்குமார் அதே இடத்தில் பலியானார். பீட்டர் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை