| ADDED : ஜூன் 01, 2024 04:19 AM
தொண்டி: தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயில் அருகே கழிப்பறை வசதியில்லாததால் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர்.தொண்டியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத உந்திபூத்தபெருமாள் கோயில் உள்ளது. ஏகாதசி, மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். சுற்றுவட்டார பகுதியில்இருந்து ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் தினமும் அன்னதானம் நடக்கிறது. வாரந்தோறும் சனிக்கிழமையில் பெண் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு கழிப்பறை வசதியில்லாததால் பெண்கள் சிரமம் அடைகின்றனர். பக்தர்கள் கூறுகையில், உந்திபூத்த பெருமாளை தரிசனம் செய்தால் திருமண தடை, நோய்கள் மற்றும் தோஷங்கள் நீங்குவதாக ஸ்தல வரலாறு உள்ளது. கோயில் உள்ளே ஆஞ்சநேயர், ராமானுஜர்,கருப்பர், கருடர், கிருஷ்ணர்சன்னதிகளும் உள்ளன.இங்கு வரும் பக்தர்களுக்கு கழிப்பறை வசதியில்லை. அன்னதானத்தில்சாப்பிட வரும் பக்தர்களுக்கும் போதிய இடவசதியில்லை. ஆகவே இக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கழிப்பறை மற்றும் அன்னதானம் கூடம் அமைத்தால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.