உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் யானை வாகனத்தில் வீதியுலா

பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் யானை வாகனத்தில் வீதியுலா

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் கடந்த மார்ச் 17-ல் கொடியேற்றத்துடன் பங்குனி பிரமோற்ஸவம் துவங்கி உள்ளது. மார்ச் 25-ல் பெரிய தேரோட்டம் நடக்கிறது.விழாவை முன்னிட்டு நாள்தோறும் காலையில் பல்லாக்கு மற்றும் இரவில் சிறப்பு வாகனங்களிலும் உற்ஸவர் கல்யாண ஜெகநாத பெருமாள் நான்குரத வீதிகளிலும் உலா வருகிறார்.திருக்கல்யாண உற்ஸவத்தை முன்னிட்டு நேற்றிரவு 7:00 மணிக்கு பத்மாஸனி தாயார் சன்னதி முன்புறமுள்ள அலங்கார ஊஞ்சல் மண்டபத்தின் முன்புறம் கல்யாண ஜெகநாத பெருமாளுக்கும், பத்மாஸனி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடந்தது.கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்களால் பத்மாஸனி தாயாருக்கு, கல்யாண ஜெகநாத பெருமாள் சார்பில் மங்கள நாண் பூட்டும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டன. யானை வாகனத்தில் உற்ஸவமூர்த்தி புறப்பாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்