உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இன்று பொது வினியோகம் திட்ட குறை தீர்க்கும் முகாம்

இன்று பொது வினியோகம் திட்ட குறை தீர்க்கும் முகாம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தாலுகா வாரியாக ஒரு கிராமத்தில் இன்று (ஜூன் 15ல்) பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.அனைத்து தாலுகாக்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது வினியோகத்திட்ட குறைதீர் முகாம் நடக்கிறது.இதன்படி இந்த மாதம் இன்று ( ஜூன் 15 ல்) கீழ்கண்ட இடங்களில் காலை 10:00 மணிக்கு பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் நடக்கிறது.ராமேஸ்வரம் அருகே வேர்கோடு, திருவாடானை புல்லுார் அருகே மச்சூர், பார்த்திபனுார் உள்வட்டம் ஊரக்குடி, முதுகுளத்துார் தெற்கு உள்வட்டம் ஏனாதி ஆகிய இடங்களில் ரேஷன் கடைகளிலும், கமுதி ராம்கோ--1 ரேஷன் கடை, திருப்புல்லாணி உள்வட்டம் உத்தரவை, ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் உள்வட்டம் - சிறுநாகுடி ஆகிய இடங்களில் ரேஷன் கடைகளிலும், கடலாடி சிக்கல் உள்வட்டம் பி.கீரந்தை அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, பெருங்குளம் அருகே தாமரைக்குளம் சமுதாயக்கூடத்தில் நடக்கிறது.இம்முகாமில் மின்னணு ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்தல், பெயர் சேர்த்தல், பிழை திருத்தம், போட்டோ பதிவேற்றம், முகவரி மாற்றம், அலைபேசி எண் பதிவு செய்தல், புதிய ரேஷன் கார்டு ஆகிய மனுக்கள் வழங்கலாம்.ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பான குறைபாடுகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்