உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வனவிலங்குகளை  விரட்ட விவசாயிகளுக்கு பயிற்சி

வனவிலங்குகளை  விரட்ட விவசாயிகளுக்கு பயிற்சி

ராமநாதபுரம், : மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் கிராமப் பணி வேளாண் அனுபவ திட்டத்தில் கொம்பூதி கிராமத்தில் காட்டுமாடு, பன்றியை விரட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். கல்லுாரி மாணவி அ.சுகந்தி செயல்விளக்கம் செய்து காண்பித்து பேசியதாவது:கொம்பூதி கிராமத்தில் காட்டு மாடு, காட்டுபன்றிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. இவை பயிர்களை சேதப்படுத்துவதால் மகசூல் பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க மருந்து தயாரித்து பயன்படுத்தலாம்.ஏக்கருக்கு 8 லி., நீருடன் 2 லி., ெஹர்போலிவ் விலங்கு விரட்டி கலந்து பயிர்கள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். இந்த மருந்து பயிர் வளர்ச்சிக்கு உதவுவதோடு பூச்சி, நோய்கள், விலங்குகள் வருவதை கட்டுப்படுத்துகிறது என்றார். விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ