உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஆசிரியர்களுக்கு ஜூலை 1 முதல் 31 வரை பணி மாறுதல் கலந்தாய்வு

 ஆசிரியர்களுக்கு ஜூலை 1 முதல் 31 வரை பணி மாறுதல் கலந்தாய்வு

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில்தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு புனித அந்திரேயா பெண்கள் பள்ளியில் ஜூலை 1 முதல் 31ந் தேதி வரை நடக்கிறது.ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் அரசு, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ராமநாதபுரத்தில் உள்ள புனித அந்திரேயா பெண்கள் பள்ளியில் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு நடக்கவுள்ளது.ஜூலை 1 முதல் 31 வரை காலை 9:30 மணிக்கு துவங்கும்.பணியிட மாறுதல் கேட்கும் விண்ணப்பத்துடன் உரிய ஆசிரியர்கள், உரிய நேரத்தில் பங்கேற்று பயனடைய வேண்டும் என தொடக்கக்கல்வி மாவட்ட அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி