உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பழங்குடியின மாணவர்கள் வெளிநாட்டில்உயர்கல்வி பயில உதவித்தொகை பெறலாம்

பழங்குடியின மாணவர்கள் வெளிநாட்டில்உயர்கல்வி பயில உதவித்தொகை பெறலாம்

ராமநாதபுரம்,- வெளிநாடுகளில் உயர் படிப்பு தொடர விரும்பும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.நடப்பு 2024--25ம் கல்வி ஆண்டில் முதுநிலை, பி.எச்.டி., மற்றும் ஆராய்ச்சி உயர் படிப்புகளை வெளி நாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.ஆர்வமுள்ள மாணவர்கள் https://overseas.tribal.gov.in// என்ற இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என மத்தியபழங்குடியின நல அமைச்சகம் அறிவித்துள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 31 (இன்று)கடைசி நாள்.மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதளம், அமைச்சகத்தின் போர்ட்டலைப் பார்வையிட்டு பயன்பெறலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ