உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலர் விபத்தில்  இளைஞர் பலி 

டூவீலர் விபத்தில்  இளைஞர் பலி 

ராமநாதபுரம் : -உத்தரகோசமங்கை அருகே சுமைதாங்கி கிராமத்தை சேர்ந்த முருகவேல் மகன் முனீஸ்வரன் 25. இவரது தாய் காளியம்மாள் உத்தரகோசமங்கை அருகே வெண்குளம் கிராமத்தில் நடந்த விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். தாயை அழைத்து வர நேற்று முன் தினம் மாலை முனீஸ்வரன் டூவீலரில் சென்றார். களரி பஸ் ஸ்டாப் அருகே ரோட்டில் நடந்து சென்ற துப்புரவு தொழிலாளி முருகேசன் 55, மீது டூவீலரில் மோதி அருகில் இருந்த பெயர் பலகையில் மோதினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த முனீஸ்வரன் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். முருகேசன் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை