மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
17 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
17 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
17 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
17 hour(s) ago
ராமநாதபுரம் : சேதுக்கரை சேது பந்தன ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று ஆடி அமாவாசைக்கு சென்ற பக்தர்களிடம் டூவீலர் நிறுத்த கட்டணம் ரூ.10 வசூலித்தனர். ஆனால் ரூ.15 எனகுறிப்பிட்டு ரசீது வழங்கினர். எனவே கட்டணம் வசூலிப்பதில் உள்ள குளறுபடியை விசாரித்து முறைகேட்டில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருப்புல்லாணி அருகேயுள்ள சேதுக்கரையில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக வருகை தந்தனர். இதில் வாகனங்களில் வருபவர்களுக்கு டூவீலருக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதில் கட்டண ரசீதில் 15 ரூபாய் என, அச்சிட்டு வழங்கப்பட்டது. வாகனங்கள் நிறுத்துவதற்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. பக்தர்கள் கடற்கரையில் தாங்கள் கழற்றி விடும் பழைய துணிகளை அப்புறப்படுத்தவில்லை. இதன்காரணமாக அடுத்து கடற்கரையில் புனித நீராட வந்த பக்தர்கள் சிரமப்பட்டனர். பக்தர்களுக்கு போதுமான அளவில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து தரப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.------
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago