உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கண்மாய் நீர்வரத்து வழி அடைப்பு அகற்ற கிராம மக்கள் வலியுறுத்தல்

கண்மாய் நீர்வரத்து வழி அடைப்பு அகற்ற கிராம மக்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம்: பனைக்குளம் ஊராட்சி கடபங்குடி கண்மாய் நீர்வரத்துவழியை சிலர் அடைத்துள்ளனர். அதை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கடபங்குடி கிராமமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கீழக்கரை தாலுகா கடபங்குடி கிராமத்தில் உள்ளகண்மாய் பாசன நீரில் 200 ஏக்கரில் விவசாயப் பணிகள் நடக்கிறது.இந்நிலையில் ஒருவர் கண்மாய் நீர்வரத்து வழியை மண்ணை கொட்டி அடைத்துள்ளார். இதனால் விளைச்சல் நிலங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே அதிகாரிகள் விசாரணை செய்து நீர்வரத்து வழி அடைப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை