உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வீணாகி வரும் மணல் மூடைகள்

பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வீணாகி வரும் மணல் மூடைகள்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் பொதுப்பணித்துறை அலுவலகம் வளாகத்தில் உள்ள மணல் மூடைகள் சேதமடைந்து வீணாகி உள்ளது.முதுகுளத்துார்--சாயல்குடி சாலை கடலாடி முக்கு ரோடு அருகே பொதுப்பணித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் கண்மாய், ஊருணிகள் மற்றும் வரத்து கால்வாய்கள் ஏராளமாக உள்ளது.பேரிடர் காலங்களில் கண்மாயில் கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதை தடுப்பதற்காக மணல் மூடைகள் பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை அலுவலகம் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட மணல் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது வளாகத்தில் உள்ள மணல் மூடைகள் சேதமடைந்து மணல் வீணாகிறது. எனவே மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு மணல் மூடைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை