உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை  உதவித்தொகை இன்றி மாணவியர் தவிப்பு 

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை  உதவித்தொகை இன்றி மாணவியர் தவிப்பு 

ராமநாதபுரம்:தமிழகத்தில் ஆதிதிராவிட நலத்துறையினரால் வழங்கப்படும் உதவித்தொகை பாதி பேருக்கு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். உரிய வழிகாட்டுதல்கள் இல்லாததால், உதவித்தொகை வந்தும் மாணவியர் வங்கி கணக்கில் ஏறவில்லை.தமிழக ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவியருக்கு 3 முதல் 5ம் வகுப்பு வரை 500 ரூபாய்; ஆறாம் வகுப்புக்கு 1,000 ரூபாய்; ஏழு, எட்டாம் வகுப்புக்கு 1500 ரூபாயும் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த தொகை மாணவியர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால், இந்த உதவித்தொகை பாதி மாணவியருக்கு மட்டுமே கிடைத்துள்ளது. இது குறித்து ஆதிதிராவிட நலத்துறையில் கேட்டால், அனைத்து மாணவியருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு விட்டது என்றனர்.வங்கியில் கேட்டால், 'ஆதார் கார்டுகள் 'அப்டேட்' செய்யாமல் இருக்கலாம். அப்டேட் செய்த விபரங்களை வங்கிக்கு தெரிவித்தால், உதவித்தொகை கணக்கில் ஏறும். கணக்கில் விபரங்கள் இல்லாவிடில் பணம் மீண்டும் ஆதிதிராவிட நலத்துறைக்கே திருப்பி அனுப்பப்பட்டிருக்கும்' என்கின்றனர். பள்ளிக்கல்வி துறையின் முறையான வழிகாட்டுதல் இல்லாததால், ஆதிதிராவிட, பழங்குடியின மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி