உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஜமாபந்தி நடத்த பணிகள் மும்முரம்

ஜமாபந்தி நடத்த பணிகள் மும்முரம்

திருவாடானை : திருவாடானை தாலுகாவில் ஜமாபந்தி நடக்க இருப்பதால் பதிவேடுகளை தயார் செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது.வருவாய்த் துறையில் ஓராண்டு கணக்கு விபரங்களை, தணிக்கை செய்து சரிபார்த்து ஒப்புதல் அளிக்கும் நிகழ்வாக ஜமாபந்தி நடத்தப்படுகிறது.திருவாடானை தாலுகாவில் நான்கு பிர்காக்கள், 61 வருவாய் கிராமங்களுக்கான பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன.பட்டா, சிட்டா, புல வரைபடம், பிறப்பு, இறப்பு பதிவு, விவசாய பணி மகசூல் என 20க்கும் மேற்பட்ட பதிவேடுகள் பராமரிக்கப்படுகிறது. அத்துடன் நில அளவைக்கு பயன்படுத்தப்படும் நில அளவை சங்கிலிகளும் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ளன.ஜமாபந்தியில் சமர்பித்து ஜமாபந்தி அலுவலரால் ஒப்புதல் அளித்த பிறகே வரும் ஆண்டில் நில அளவு சங்கிலிகளை பயன்படுத்த முடியும்.திருவாடானை தாலுகாவில் ஜூன் 11ல் துவங்கி 14ல் முடியும். ஜமாபந்தியில் வருவாய்த்துறை பராமரிக்கும் பதிவேடுகளை சரிபார்ப்பதோடு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவுள்ளது.பெரும்பாலான சேவை ஆன்லைன் ஆகிவிட்டதால் விண்ணப்பமும் ஆன்லைன் வழியாக பெறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை