உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஓட்டல் உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது

ஓட்டல் உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது

சாயல்குடி: சாயல்குடியில் பரோட்டா தரவில்லை என ஓட்டல் உரிமையாளர் அப்துல் லத்தீப்பை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். சாயல்குடியில் இருந்து துாத்துக்குடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் ஓட்டல் நடத்தி வருபவர் அப்துல் லத்தீப் 45. கடந்த ஜன.21 ல் இரவு ஓட்டலுக்கு வந்த நான்கு வாலிபர்கள் பரோட்டா கேட்டுள்ளனர். அப்போது பரோட்டா இல்லையென அப்துல் லத்தீப் கூறினார். ஆத்திரமடைந்த நான்கு பேரும் சேர்ந்து கொண்டு அவரை விறகு கட்டை, பாத்திரங்களால் தாக்கினர்.சாயல்குடி போலீசார் 4 நாட்களுக்குப் பிறகு சி.சி.டி.வி., கேமராவில் வந்த காட்சியை அடிப்படையாக வைத்து சாயல்குடி மாதவன் நகர் தமிழரசன் 23, மற்றும் கூராங்கோட்டை சக்திவேல் 27, ஆகியோரை கைது செய்தனர். மேலும் பெயர் தெரியாத 2பேரை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை