உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குறைதீர் கூட்டத்தில் 270 பேர் மனு பொருளீட்டு கடன் உதவி வழங்கல்

குறைதீர் கூட்டத்தில் 270 பேர் மனு பொருளீட்டு கடன் உதவி வழங்கல்

ராமநாதபுரம், : ராமநாதபுரத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் 321 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. ரூ.1 லட்சத்து 81ஆயிரத்தில் பொருளீட்டு கடன் வழங்கப்பட்டது.ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில் பிப்ரவரில் பிறந்த குழந்தைகளை பாராட்டும் வகையில் கேக் வெட்டி பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி, கலெக்டர் தென்னை மரக்கன்றுகளை பரிசாக வழங்கினர்.வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை சார்பில் இருவருக்கு பொருளீட்டு கடனாக ரூ.1லட்சத்து 81 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட 270 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மாரிச்செல்வி வேளாண் விற்பனை, வணிகத்துறை மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் விசுபாபதி, அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை