உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

திருவாடானை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காளவாய்பொட்டல் பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல் 34, சின்னையா 39. இருவரும் டூவீலரில் திருவாடானை அருகே திருவெற்றியூருக்கு சென்று அங்குள்ள இரு கண்மாய்களில் இறங்கி தனித் தனியே மீன்பிடித்தனர். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட சக்திவேல் ஆழமான பகுதிக்கு சென்ற போது நீரில் மூழ்கி இறந்தார். சிறிது நேரத்தில் சக்திவேல் உடல் மிதந்தது. இதை பார்த்த சின்னையா அவரது உடலை கரைக்கு கொண்டு வந்தார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி