உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  முதல்வர் மருந்தகத்தில் கூடுதல் மருந்துகள்  தினமலர் செய்தி எதிரொலி

 முதல்வர் மருந்தகத்தில் கூடுதல் மருந்துகள்  தினமலர் செய்தி எதிரொலி

திருவாடானை: முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளது என்று தினமலர் நாளிதழ் செய்திக்கு பின் கூடுதல் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. திருவாடானை தாலுகாவில் கோனேரிகோட்டை கூட்டுறவு சங்கம் சார்பில் திருவாடானையிலும், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் வலமாவூர் கூட்டுறவு சங்கம் சார்பில் திருப்பாலைக்குடியிலும், தனியார் தொழில் முனைவோர் சார்பில் ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்துார் ஆகிய நான்கு இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் கடந்த பிப்.24 ல் திறக்கபட்டது. ஒவ்வொரு மருந்தகத்திலும் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டது. இருந்தபோதும் சுகர், ரத்த அழுத்தம், இன்சுலின் உள்ளிட்ட பல்வேறு வகையான மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளது. மாத்திரை கவர்களும் இல்லாததால் கையில் வாங்கி செல்லும் போது தவறி விழுந்து விடுகிறது. இது குறித்து தினமலர் நாளிதழில் சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கூடுதல் மருந்துகள் மற்றும் மாத்திரை கவர்கள் வரவழைக்கபட்டு, இருப்பு வைக்கபட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ