உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிறுதானியம் சாகுபடி செய்ய வேளாண்துறை அறிவுறுத்தல்

சிறுதானியம் சாகுபடி செய்ய வேளாண்துறை அறிவுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் சாகுபடி பகுதிகளில் சிறுதானியங்களை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுறுத்தினர்.ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் மூலம் 12 ஆயிரத்து 142 ஏக்கரில் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. இந்நிலையில் பெரிய கண்மாயில் தற்போது கோடை சாகுபடி செய்யும் அளவிற்கு இரண்டு அடி தண்ணீர் உள்ளது. பெரிய கண்மாய் பாசனப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர் தற்போது 70 சதவீதம் அறுவடை செய்யப்பட்டு விட்டன.இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் பெரிய கண்மாயில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் கோடைக்கால சிறு தானிய பயிர்களான உளுந்து, தட்டை உள்ளிட்ட சிறு தானிய பயறு வகைகளும், எள், பருத்தி உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்து பயனடைமாறு ஆர்.எஸ்.மங்கலம் வேளாண் உதவி இயக்குனர் ராஜலட்சுமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ