உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முன் விரோதத்தில் தாக்குதல்  2 ஆண்டு சிறை தண்டனை 

முன் விரோதத்தில் தாக்குதல்  2 ஆண்டு சிறை தண்டனை 

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முன் விரோதத்தில் தாக்குதல் நடத்தியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.களரியை சேர்ந்தவர் காமராஜ் 42. இவருக்கும் வெண்குளம் பகுதியை சேர்ந்த போஸ் மகன் துரைச்சாமி 31, இருவருக்கும் முன் விரோதம் இருந்தது. காமராஜ் 2017 பிப்.28ல் தனது பெட்டிக்கடைக்கு பொருட்கள் வாங்க டூவீலரில் உத்தரகோசமங்கை சென்ற போது நல்லாங்குடி கண்மாய் அருகே காமராஜ் மீது துரைச்சாமி தாக்குதல் நடத்தினார்.உத்தரகோசமங்கை போலீசார் துரைச்சாமி மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. துரைச்சாமிக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி கவிதா தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை