உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பா.ஜ., ஆர்ப்பாட்டம்

 பா.ஜ., ஆர்ப்பாட்டம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே தேரிருவேலி பஸ் ஸ்டாண்டில் தமிழக அரசை கண்டித்து பா.ஜ.,கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி முன்னிலை வகித்தார். அப்போது மத்திய அரசு கிராமப்புறங்களில் வளர்ச்சிக்கான அறிவித்த திட்டங்களை தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகமும் செயல்படுத்தாததை கண்டித்து மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சட்டசபை அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன்,மாநில விளையாட்டு மேம்பாட்டு பிரிவு செயலாளர் இளையராஜா,மத்திய அரசு நலத்திட்ட பிரிவு செயலாளர் முத்துலிங்கம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை